கலைந்த கூந்தல் நெற்றியில் பொட்டு மேல் வேர்வை தூளிகள் விழி ஓரத்தில் வடிய செவியோரம் கழுத்து உரசிய குண்டலமும் இதழ்களால் முத்தமிட்டது போல் முகப்பருக்கள்.கசங்கிய சுடிதாரோடு தோளில் பெரிய பேக் போட்டு கையில் தூக்க முடியாத ஒரு பேக் வைத்து மதுரை பஸ்ஸ்டாண்டில் கொண்டையில் மதுரை மல்லி கசங்க அவள் எதிர் எதிரே நான் சந்திக்க அவளது அழகை ரசிக்க எனது உதட்டில் புன்னகை பூக்க.
அவள் ஒரு மாதிரி திமிராக முறைத்து பார்க்க அந்த முண்டக்கண்களை உருட்டும் போது எனக்கு சிரிப்பு வந்து இன்னும் விழி அசைக்காமல் ரசிக்க அவள் என்னை கடந்து சென்றால்.
என்னதான் பெண்கள் மேக்கப் போட்டாலும் காலையில் தூங்கி எழுந்து வரும் போது கலைந்த கூந்தலில் அந்த சிங்கார முக பொழிவை ரசிப்பது எவ்வளவு இன்பம்.
நான் அவளை கடந்து அங்கே இருக்கையில் அமர்ந்து டீ குடிக்க அவள் எனது பக்கத்தில் வந்து முன் நின்றால்
நான் மனதில் என்னடா திட்ட போறாலா இல்லை அடிக்க போறாளா தெரியலையே என்று அவளது விழிகளை பார்க்க
அவள்: எதற்கு அப்படி பார்த்திங்க
நான் தயங்கியவாறு உங்கள் செவி ஓரத்தில் கலைந்த கூந்தல் நீங்க வருடும் போது அழகாக இருந்தது.அதான் பார்ந்து வெட்கத்தில் மெய்மறந்து சிரித்து விட்டேன் சாரி.
அவள்: அய்யோ நானே கருப்பா இருக்க என் அழகை பார்த்து மெய்மறந்துட்டிங்க இதை நான் நம்பனும்
நான்:உன்மையிலே தான் ஆண் வெட்கம் எப்படி இருக்கும் அதான் என்னை அறியாமல் இதழ்களில் சிரிப்பு வந்துட்டு
அவள்: அப்படியா நம்பவே முடியல
எனது பக்கத்து இருக்கையில் அமர
நீங்க தான் முதல் தடவை இப்படி சொல்லி இருக்கிங்க அதுவும் உங்க சிரிப்பிலே தெரிகிறது அதான் உங்களிடம் பேச வந்தேன்.
சாரி உங்களை பார்த்து முறைத்து விட்டேன்.
நான்: பரவாயில்லை அந்த திமிர்ல கூட உங்கள் கண்களில் பொழிவை பார்த்தேன் நீங்கள் முறைத்தாலும் அழகு தான்
அவள்: அப்படியா என்ன தெரிந்தது எனது கண்களில்.
நான்: சிரித்துக்கொண்டே நிலா தெரிந்தது போங்க
அவள்: விடியற்காலையில் நிலா தெரிதா உனக்கு
நான்:ஆமா ஆமா நீங்க டீ குடிக்கிங்களா
அவள்: ம்ம் குடிக்கலாம் ஆனால் உங்க டீ க்கு நான் தான் காசு கொடுப்பேன் அப்படினா சொல்லுங்க டீ குடிக்க
நான் சிரித்துக்கொண்டே அப்படினா ஒரு வடை எடுத்துகிறன் சேர்த்து கொடுங்க
அவளும் சிரித்துக்கொண்டே சரிப்பா எடுத்துகோ
இருவரும் டீ குடிக்க.
அவள்: உங்கள் பெயர்
நான்:ஜீவா… உங்கள் பெயர்
அவள்:தனம்
நான்: பெயருக்கு ஏற்றமாதிரி சாந்தமா தான் இருக்கிங்க
அவள்:அப்படியா தெரிது
நான்:ஆமா.நீங்க எங்கே போறிங்க
அவள்: திருநெல்வேலி.நீங்க?
நானும் அங்கே தான்
அவள்: சிரித்துக்கொண்டே அப்படினா என் பேக் தூக்க ஆள் கிடைச்சிட்டு
நான் சிரித்துக்கொண்டே இல்லை நான் தூத்துக்குடி போறன்.
அவள்:பார்த்தியா அதுக்குள்ள கழட்டி விட்ட.நீ ஒன்னும் பேக் தூக்க வேணாம் வா
நான் சும்மா சொன்ன இதை தூக்க சொல்லனுமா….சொல்லாமே செய்வேன்.
அவள்:பாரேன்.. நீங்க என்ன பன்னுறிங்க
நான்:வேலை தேடி ஊர் ஊரா நாய் மாதிரி சுத்துறன்.நாய் கூட ஒரு வீட்டில் நிலையாக அது வேலையை கரைக்ட்டா பன்னும்.மனுசன் படிச்சி முடிச்சிட்டு வேலை தேடுவது தான் சுண்ணிலா கிளிஞ்சி போயிருது.
அய்யோ சாரி வலியில் வார்த்தையை விட்டேன்.
அவள்:இதுல என்ன இருக்கு பரவாயில்லை
நான்: நீங்க என்ன பன்னுறிங்க
அவள்: நானும் தான் இப்படி அழைத்தேன் அப்புறம் ஒரு நகை கடையில் வேலை பார்த்தேன் அதுவும் செட் ஆகலை அப்புறம் Dubai போயிட்டன் வந்து ஒரு வாரம் தான் ஆகுது இப்போது சென்னைக்கு போயிட்டு வந்தேன்.
நான்: அப்படியா சூப்பர்.எதுவும் பெர்ஃப்யூம் இருக்கா
அவள் சிரித்துக்கொண்டே ஹான் அதுலா நிறைய இருக்கு வேனுமா
நான்:ஆமா தந்தா நல்லா தான் இருக்கும்.
அவள்: வாங்க இன்னொரு நாள் மீட் பன்னும் போது தாரேன்.
நான் சரி சரி.எனக்கு எதுவும் வேலை இருக்குமா அங்க
அவள்: ஹான் இருக்கும் பாஸ்போர்ட் இருக்கா.
நான் இல்லேயே இன்னைக்கே அப்ளே பன்னுறன்.
அவள்: பன்னுங்க.பன்னிட்டு என்னிடம் சொல்லுங்க.
நான்: கண்டிப்பாக நீங்க தான் என்னை கூப்பிட்டு போனும்
அவள்:நீ என்ன சின்ன குழந்தையா உன்னை கூப்பிட்டு அழைய
நான் ஆமா என்று எனது விரலை சூப்ப
இருவரும் சிரிக்க
அவள்: வாங்க அந்த பஸ்ல போகும்
இருவரும் இரண்டு சீட் இருக்கும் இடத்தில் அமர்ந்தோம்.
அவள் என்னை டிக்கெட் எடுக்க விடாமல் அவளே எடுக்க என்னை பற்றி எல்லாம் ஒவ்வொன்றாக கேட்டு தெரிந்து கொள்ள
இறுதியில் காதலை பற்றி கேட்க
நான் சிரித்துக்கொண்டே பன்னனும் ஆசை தான் என்னை லவ் பன்ன யாரு இருக்கா.
அவள்: உங்களுக்கு என்ன கருப்பா இருந்தாலும் அம்சமா இருக்கிங்க.
நான் அம்சமா இருக்கேன்னா இல்லை அம்மாவாசை மாதிரி இருக்கேனா இதுவரைக்கும் ஒரு அம்சவள்ளி கூட என்னை கண்டுக்கவில்லை நீங்க வேற கீண்டல் பண்ணாதிங்க.
ஓகோ சரி என்றால் எனக்கு கண்கள் சொக்கியது அப்படியே கண்களை மூட அவள் போன் பார்த்திட்டு வர நான் அப்படியே தூங்கி விட்டேன்.இடையில் ஒரு ஹோட்டலில் நிற்க எனது கண்ணங்களை யாரோ கிள்ளுவது போல இருக்க கண் திறக்க அவளது தோளில் மேல் சாய்ந்து இருக்க வேகமாக தலைமை எடுக்க
அவள்:என்ன சார் நல்ல தூக்கம் போல
நான்:ஆமா.
அவள்:சரி வாங்க டீ குடிக்கலாம்
நான் சரி என்று இருவரும் இறங்க
நான்:நீ பாத்ரூம் போனும்னா போய்ட்டு வா என்று சொல்ல அவள் சரியென்று பாத்ரூம் போக
நான் அவளுக்கு டீ பிஸ்கட் கேக் எல்லாம் வாங்கி வைக்க அவளும் வந்தாள் இருவரும் டீ குடிக்க .
நீங்க தூங்கலையா
அவள்: நான் எங்க தூங்க உங்களை தாலாட்டவே நேரம் சரியா போய்ட்டு
இருவரும் சிரிக்க
நான் சரிவிடுங்க இது உங்களுக்கான நேரம் நான் தாலாட்டுறன் நீங்க தூங்குங்க
அவள்: வேணாம் வேணாம் நான் வீட்டுல போய் தூங்குவேன்.
நான்:வாங்க பஸ் எடுத்துட்டு போயிற போறான்
இருவரும் பயணத்தை நெல்லை நோக்கி நகர்த்தினோம்.
நான் செதுக்கிய வரிகள் அனைத்தும் நிஜமில்லா நினைவுகளே இந்த மாதிரி வாழ்க்கை வாழத்தான் ஆசை ஆனால் எனக்கு அந்த பொருத்தனம் இல்லை.எனது கண்ணகியை கண்களில் கானும் வரை எனது பயணங்கள் உறங்குவதில்லை.உங்களுக்கு விருப்பம் இருந்தால் [email protected]
Mail 💌 google chat la கருத்துக்களை தெரிவிக்கலாம்.நன்றி.
நீதான் எந்தன் காதல் வசந்தம் ~1
Posted on77450280cookie-checkநீதான் எந்தன் காதல் வசந்தம் ~1