ஏதோ மோகம் ஏதோ தாகம்

Posted on

குண்டா இருக்கிற பொண்ணு மட்டும் வேண்டாமா பலாப்பழம் மட்டும் பெரிதா வேணுமா.பழங்கள் மட்டும் பார்த்து பார்த்து பெரிதாக வாங்கிறோம் இது என்னடா நியாயம் என்று ரயில்வே ஸ்டேஷன்ல உட்கார்ந்து எனது அக்காவிடம் போன் பேசினேன் ஆமா எனது அண்ணணுக்கு பொண்ணு பார்க்க போனாங்க அதுக்கு தான் இந்த பட்டிமன்றம்.பொண்ணு போட்டோ அணுப்பு நான் வேணும்னா கட்டிக்கிற அவளுக்கு வேற பொண்ணு பாருங்க இதே மாதிரி அவளை எத்துனை பேரு பார்த்திட்டு போய் இருப்பாங்க அவளது மனம் எவ்வளவு சங்கடப்படும் என்று அக்காவிடம் சண்டைப் போட்டேன் அவள் சரி கத்தாதே இரு போட்டோ அணுப்புற அவளும் போட்டோ அனுப்பினாள்.கண்ணங்கள் காஷ்மீர் ஆப்பிள் போல அமுலு குட்டி மாதிரி இருந்தா புன்னகையில் பற்கள் மின்னியது கண்ணங்களை கொஞ்சனும் போல இருந்தது உடனே அக்காக்கு போன் பண்ணினேன்.
இந்த பொண்ணு தக்காளி மாதிரி இருக்கா இவளை வேணாம் சொல்லுறான் அவளுக்கு பிடிக்கலைனா விடு நான் பேசிக் கட்டிக்கிறன்.அவளுக்கு சீக்கிரம் வேற பொண்ணு பாருங்க நான் பொண்ணுட்ட பேசிக்கிற இது ஒன்று வியாபாரம் இல்லை சும்மா பொண்ணு பார்த்திட்டு வேணாம் சொல்வதற்கு அவளுக்கு எவ்வளவு மனம் புன்படும் அதுலாம் பார்ப்பதற்கு முன்பு யோசிக்கிறது இல்லை.அவள் நம்பர் கொடு என்று வாங்கினேன்.
இதை எனது பின்னால் இருந்த ஒரு பெண் செவிகள் கேட்க நான் கவனிக்கமால் கடற்கரை நோக்கி போகும் ரயிலில் பயணித்தேன்.அந்த பெண் என்னை பின் தொடருவது தெரியலை.
நான் அலைக்கடலின் நடுவே அடிக்கிற வெயிலில் ஒரமாக உட்கார்ந்து கொண்டு இருந்தேன் எனது பின்னால் யாரோ நிற்பது போல் தெரிந்தது அவர்கள் நிழல் எனது முன்னால் விழுந்தது.அது ஒரு பெண்ணின் நிழல் அவர்கள் என்ன தான் பார்க்கிறார்களா இல்லை கடல் அலையா என்று யோசித்து அந்த நிழலையே பார்த்து கொண்டு இருக்க என் வாய்தான் சும்மா இருக்காதே
நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம் கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
என்று அவளது நிழலினை பார்த்து படித்தேன்
அப்போது அந்த நிழல்கள் அசைய கொஞ்சம் என்னை நெருங்க
நான் வாழும் வாழ்வே உனக்காக
தானே நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும்
தேனே எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் என்று குரல் மட்டும் வந்தது
சிரித்துக்கொண்டே பின்னால் திரும்பினேன் 55 வயதில் ஒரு பெண் அவளும் என்னை பார்த்து சிரித்தாள் நானும் எனது 32 பற்களும் தெரிய சிரித்து நல்ல பாடுறிங்க
நீங்களும் தான்…அட ஏன் நீங்க வேற காமெடி பன்னாதிங்க.உங்களிடம் பேசலாமா பிரியா இருக்கிங்களா
நான் அவ்வளவு பெரிய ஆல் இல்லை பேசலாம் வாங்க என்று எழுப்பினேன் பரவாயில்லை அங்கே உட்காருங்க என்று எனது பக்கத்தில் உட்கார்ந்தாள்.
‌என் பெயர் எழில் என்று கை கொடுத்தால் எனது கைகளில் மணலாக இருந்தது எனது பேண்டில் துடைத்தேன் பரவாயில்லை கை கொடுங்க நான் இனியன் என்று கை கொடுத்தேன்.நைஸ் நேம் என்றால் அதுதான் இனியன் என்று சிரித்தேன்
உங்களை ரயில்வே ஸ்டேஷன்ல பார்த்தேன் அங்கே நீங்க யாரிடமோ போனில் பேசும் போது குண்டா இருக்கிற பொண்ணு கல்யாணம் பன்னுவதை பற்றி அட ஆமா அங்கே நீங்க இருந்திங்களா ஆமா உங்க பின்னாடி தான் இருந்தேன் அப்போது உங்களிடம் பேசலாம் என்று நினைத்தேன் ஆனால் சுற்றி மக்கள் அதிகமாக இருந்ததினால் பேச முடியலை அதுக்கு தான் உங்களை பின்தொடர்ந்தேன் என்றால் அவள்.
நான் ம்ம் ஆமா எனது அண்ணண் மாதிரி எத்தனை பேர் அந்த பெண்ணை பார்த்திட்டு பிடிக்கலை போயிருப்பாங்க அந்த பெண்ணின் மனது எப்படி துடிக்கும்
அவள் ஆமா ஆமா குண்டாக இருக்கிற பொண்ணு ஏதோ பொருளை பார்க்கிற மாதிரி பார்க்கிறாங்க ஆனால் நீங்கள் பார்க்காமலே அந்த பெண் பிடித்து இருக்கிறது அந்த மனம் தான் உங்களை தேடி வந்தது
நான் நன்றி உறவே
அவள்; வங்கியில் வேலை செய்கிறேன் நான் இப்போது எப்படி இருக்கிறனோ அப்படியே தான் கல்யாணத்துக்கு முன்பு இருந்தேன் எனது கணவர் எனது உருவத்தை தான் பார்த்தார் எனது மனதை புரிந்து கொள்ளவில்லை ஏதோ ஒருத்தியை திருமண செய்து விட்டார் என்பதை போல் தான் இருந்தார் எனக்கு குழந்தையும் இல்லை இப்போது அவரும் இல்லை ஏதோ எனது வாழ்க்கை ஓடுகிறது.நான் எதற்கு இதை உங்களிடம் சொல்கிறேன் என்றால் இதை போல் அந்த பெண்ணுக்கு வர கூடாது நீங்க அந்த பெண் கண்டிப்பாக திருமண பன்னுங்க என்றால் .
நான் கண்டிப்பாக பன்னுகிறேன்.நீங்கள் முடிந்த வாழ்க்கை தொடங்கலாமே
அவள்; இல்லை இல்லை இப்போது இருக்கிற காலங்களில் நல்ல மனதை அரிவது கடினம் என்னிடம் இருக்கிற பணத்தை தான் கவர நினைப்பார்களே தவிர எனது மனதில் என்ன இருக்கிறது என்பதை யாரும் புரிந்து கொள்ள பக்குவம் இல்லை வாழ்க்கை நகருவது போல நானும் நகருகிறேன்.
நான் எழுந்து அவளுக்கு எதிரே கால்களை மடக்கி உட்கார்ந்தேன் அவளது இரு கைகளையும் பிடித்து ஒரு பெண்ணுக்கு துனை என்பது ஆண்கள் மட்டுமே வாழ்க்கை என்பது இல்லை இந்த உலகம் பொல்லாதது நாம் பார்க்க கூடிய அழகான விஷயங்கள் நிறைய இருக்கிறது அது கடவுளின் அற்புத படைப்பு நீங்க சும்மா வீடு விட்டா பேங்….பேங் விட்டா வீடு என்று இருக்காதிங்க நீங்க இளமையில் ரசிக்க நினைத்த உலகத்தை சுற்றி வாங்க இந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் அதாவது ஆணோ பெண்ணோ நம்பாதிங்க சுற்றி இருக்கிற எல்லாம் கயவர்கள் நாம நாமளாக இருக்கனும் சரியா
அவள்; ம்ம் சரி
நான்; சிரித்துக்கொண்டே எழில் என்ன ம்ம்
அவள்; சிரித்துக்கொண்டே சரி இப்போது நன்றாக புரிகிறது என்று எனது இரு கைகளின் விரல்களை இருக்கி பற்றினால்.. நீங்க என் கூட பேசுவிங்களா பீளிஸ் யாரையும் நம்ப முடியல
நான்; நீங்க எப்போது பேசுனாலும் பேசுகிறேன்.
அவள்;உங்க வயது என்ன அதுக்குள்ள கல்யாணமா
நான்;28வயசு ஆகிட்டு இன்னும் கல்யாணம் பன்னலை இதுல அதுக்குள் கல்யாணம் கேட்குறிங்க.
அவள்; அய்யோ அப்படினா சீக்கிரம் பன்னுங்க
நான்; கல்யாணம் பன்னக்கூடாது தான் இங்க வந்து இருக்கேன்..எவனோ
டைம் டேபிள் போட்டு வைச்சிட்டு போயிட்டான் இந்த வயதில் திருமணம் அப்புறம் குழந்தை இத்தனை பெத்துகனும் அப்புறம் அவங்களுக்கு படிக்க வைக்கனும் அப்புறம் கல்யாணம் பண்ணி வைக்கனும் மறுபடியும் முதலில் இருந்து வாழ்க்கை பம்பரம் மாதிரி சூழல்கிறது எவனோ போட்டு வைத்த டைம் டேபிள் மாதிரி ஏன் வாழனும்.
நமக்கு எப்போதும் பிடிக்கோ அப்போது கல்யாணம் குழந்தை வேணும்மா வேண்டாமா நாங்கள் இருவரும் தான் தீர்மானிக்கனும் காதல் எந்த வயதில் வரும் ?
எப்போதும் வரும் ?
எப்படி வரும்?
எங்கே வரும் ?
எவ்வாறு வரும்?
எவ்வளவு தூரம் வரும் ?என்று அளவுகோல் வைத்து அளக்க முடியாது அது வித்தியாசம் பார்க்காமல் கூட வரும் அது வந்து விட்டால் சும்மா வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க கூடாது….அந்த காதலை அழகாக நகர்த்தி இன்பத்தை அனுபவிக்க அனுபவிக்க திகட்டாத காதலாக கொண்டு போனும்.
அய்யோ நான் வேற எங்கேயோ பைத்தியம் மாதிரி உங்களிடம் உளரிட்டு இருக்கேன் பாருங்க சாரி.
அவள் என்னை ஆழமாக கண்களை பார்த்து உதடுகளில் சிரிப்புடன் கவனித்தால்.
நான் அவளது உதடுகள் வறண்டு இருந்ததை கவனித்தேன்.
அவள்;அதுளா ஒன்றும் இல்லை நீங்க பேசுங்க
நான்; பொதுவாக நான் அதிகமாக பேச மாட்டேன் பல வித ஏக்கங்கள் கனவுகள் மனதில் இருக்கிறது வெளியே சொன்னால் பைத்தியம் மெண்டல் என்பார்கள் அதற்காக தான் உறவுகளிடம் இருந்தும் நண்பர்களிடம் இருந்தும் விழகி இருக்கிறேன்.
எனது வாழ்க்கை நான் மெதுவாக நகர்த்துகிறேன்.

பருமனாக இருக்கும் ஒரு சில பெண்களின் தாக்கம் மனதில் எப்படி இருக்கும் என்று கற்பனையாக எனது மனதில் தோன்றியதை சொன்னேன் தவறு இருந்தால் மன்னிக்கவும்.இந்த கதை நல்லா இருந்தா பெண்மணிகள்
[email protected] மெயிலில் அல்லது கூகுள் சேட்டுல பேசுங்க …

769600cookie-checkஏதோ மோகம் ஏதோ தாகம்