கண்ட நாள் முதல்
உங்கள் கருத்துக்களை பிடித்திருந்தால் இதில் கொட்டலாம் இல்லையென்றால் காரி துப்பலாம்.
ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க ரொம்ப நாள் அப்பறம் என் வாழ்க்கைல கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடந்த அனுபவத்தை சொல்ல வந்துருக்கேன்.
என் பேர் ஹரி நான் சென்னைல இருக்கேன் எனக்கு கல்யாணம் ஆகி 12 வருஷம் ஆகுது ஏனோ என் மனைவி சொந்தமா ஒரு கம்பெனி நடத்திட்டு இருக்காங்க. நான் ஏதோ கொஞ்சம் அப்பப்ப வர வேலைய பாத்துட்டு இருக்கேன் அப்பப்ப பசங்களுக்கு டியூஷன் எடுப்பேன் என் மனைவிக்கு என் கூட பேச கூட நேரம் இருக்காது எப்பயும் காசு பணம் சம்பாதிக்கணும்னு இதே நெனப்பு தான். அதனால வாழ்க்கைல ஒரு என்ஜோய்மேன்ட் சுத்தமா இல்லாம போயிட்டு இருந்துச்சு. ஏதோ அப்பப்ப நண்பன் கூட வெளிய சுத்துறது அப்படியே போயிட்டு இருந்துச்சு. எனக்கு ஒரு பையன் 6 படிக்கிறான் தினமும் நான் தான் அவனை ஸ்கூல்ல விட்டுட்டு சாயங்காலம் கூட்டிட்டு வருவேன்
இப்படியே அர்த்தம் இல்லாம ரொம்ப போர் அடிச்சிட்டு இருந்த என் வாழ்க்கைல ஒரு நாள் சாயங்காலம் ஆபீஸ்ல ஒரு நேரத்தில காபி குடிக்க வெளிய வந்து காபி குடிச்சிட்டே என் கைல போன் நோண்டிட்டே இருந்தேன் அப்போ என் காதுல ஒரு கொலுசு சத்தம் ஏதோ ரொம்ப நாள் அப்பறம் அந்த சத்தத்தை கேட்கற மாதிரி தோணுச்சு என்ன அதுனு தலை நிமிர்த்தி பாத்தேன் அப்போ எனக்கு எதிர்ல நடந்து போய்ட்டு இருந்தாங்க ஒரு அழகான ஒரு நட்சத்திரம் மாதிரி ஒரு ஜொலிப்பு உதட்டுல ஒரு சிரிப்பு அவங்க முகத்துல அவ்ளோ அழகா கலையா சிரிச்சு பேசிட்டே நடந்து என்ன தாண்டி போனாங்க என் ஆபீஸ் பக்கத்தில இருக்கிற பஸ் நிறுத்தத்துல நின்னுட்டு இருந்தாங்க நான் என் காபி கீழ போட்டுட்டு அவங்க பின்னாடியே நடந்து போனேன்
எனக்கு உள்ள என்ன ஆச்சு நான் என்ன பண்ணிட்டு இருக்கேன் எனக்கு ஆபீஸ் உள்ள போக நேரம் ஆச்சுன்னு எதுவும் தெரியல அப்படியே அவங்களையே பாத்து மலச்சு போய் நின்னுட்டு இருந்தேன் அப்போ ஒரு பஸ் வந்துச்சு அதுல அவங்க ஏற போனாங்க நானும் பின்னாடியே ஏற போனேன் உடனே என் பின்னாடி இருந்து இன்னொரு பொண்ணு என் முதுகை தட்டி சார் இது பெண்கள் பயணிக்கும் பஸ்னு சொன்னாங்க ஐயோ இப்ப தான பாத்தேன் அதுவும் இப்படி ஒரு அழகிய என்னால எப்படி மிஸ் பண்ண முடியும்னு தோணுச்சு உடனே கீழ இறங்கி ஆபீஸ் வாசல்ல நிக்குற என் பைக் எடுத்தேன் அப்படியே அந்த பஸ் பின்னாடியே ஓட்டிட்டு போனேன் அந்த நட்சத்திர பொண்ணு பஸ்ல உக்கார இடம் இல்லாம நின்னுட்டே வந்துட்டு இருந்தாங்க ஆனா யாரு கூடையோ ரொம்ப நேரம் இன்னும் போன் பேசிட்டே தான் வந்தாங்க ஒரு பக்கம் கவலையா இருந்துச்சு இவ்ளோ அழகா இருக்காங்க எப்படியும் நம்ம பசங்க இந்நேரம் புடிச்சிருப்பானுங்களேனு தோணுச்சு ஆனா அவங்கள விட்டுட்டு போறதுக்கு மனசே வரல
என் ஆபீஸ்ல இருந்து ஒரு அஞ்சு ஸ்டாப்பிங் அப்பறம் அவங்க இறங்குற இடம் வந்துச்சு அவங்க இறங்கும் போது அவங்க சேலை கால் கிட்ட பஸ்ல மாட்டுச்சு தடுமாற பாத்தாங்க அந்த ஒரு நொடி ஏங்க பாத்னு அப்படியே என்ன நானே அடக்கிக்குட்டேன் அப்பறம் அவங்க பஸ்ல இருந்து வெளிய வந்து நடந்து போயிட்டே இருந்தாங்க நானும் பின்னாடி பைக்ல பின் தொடர்ந்துட்டே போனேன் நம்ம தான் நைன்டீஸ் கிட்ஸ் ஆச்சே பின்னாடியே போய்ட்டு வீடு எங்க இருக்குனு கண்டுபுடிக்கிறதுக்கு நமக்கு சொல்லியா கொடுக்கணும் அப்படியே அவங்க பின்னாடியே போய் அவங்க வீட்டை கண்டுபுடிச்சிட்டேன் எதுக்கும் அது தான் அவங்க வீடானு தெரிஞ்சிக்க அங்கேயே நின்னு பாத்துட்டு இருந்தேன் அப்பறம் கொஞ்ச நேரம் அப்பறம் மறுபடியும் அந்த கொலுசு சத்தம் கேக்க ஆர்வத்தோட எட்டிப் பாத்தேன் உள்ள இருந்து ஒரு நயிட்டியோட வெளிய வந்து பெருகிற்று இருந்தாங்க சரி அப்போ இது தான் இவங்க வீடுன்னு முடிவு பண்ணேன் அதுக்கு அப்பறம் தான் ஆபீஸ் ஞாபகம் வந்துச்சு அய்யய்யோ அப்படியே பாதில வந்துட்டேனேனு யோசிச்சு அப்படியே பைக் எடுத்துட்டு செம்ம வேகமா ஆபீஸ் போய்ட்டு உள்ள போனேன் நல்ல வேல இவ்ளோ நேரம் நான் இல்லனு யாரும் கவனிக்கல அதனால உள்ள போய் அப்படியே உக்காந்து என் வேலைய பாக்கலாம்னு உக்காந்தேன் ஆனா ஏனோ அன்னிக்கு எனக்கு வேலையே ஓடல
என் மனசுக்குள்ள முழுக்க அவங்க ஞாபகமாவே தான் இருந்துட்டே இருந்துச்சு அவங்களோட அந்த புடவை அவங்களோட அந்த கலையான முகம் அந்த அழகு நிறைஞ்ச பொலிவான சிரிப்பு என் மனசுக்குள்ள ஓடிட்டே இருந்துச்சு அதுவும் அந்த அழகான சிரிப்பை நினைக்கும் போது எனக்குள்ள ஏதோ செஞ்சு அப்படியே ஒரு பாட்டு பாடி பயங்கரமா டான்ஸ் ஆடணும் போல இருந்துச்சு என் மனசுக்கு அவ்ளோ ஒரு ஆனந்தமான நிகழ்வை ஏற்படுத்துச்சு அவங்க கூட பழகுறதுக்கு என்ன பண்றது ஏதாவது பண்ண முடியுமான்னு யோசிச்சேன் அவங்க எங்க வேல செய்யுறாங்க என்னனு கண்டுபுடிக்கணும்னு நெனச்சேன் அதே மாதிரி அடுத்த நாள் அவங்கள பாத்த அதே நேரத்தில வெளில போய் நின்னு அவங்கள எதிர் பாத்து நின்னு ஒரு டீ வாங்கி குடிச்சிட்டு இருந்தேன் ரொம்ப நேரம் ஆயிடுச்சு ஆனா அவங்க வரவே இல்ல ரொம்ப மனசு நொந்து போய்ட்டேன் அன்னிக்கு நாள் முழுக்க எனக்கு நாள் ஒழுங்காவே இல்ல அவங்களையே நெனச்சுட்டு இருந்தேன்
ஆபீஸ் முடிஞ்சு கிளம்பும் போது அவங்க வீடு பக்கமா போய் அவங்கள பாக்கலாம்னு தோணுச்சு வண்டி எடுத்துட்டு கெளம்புனேன் அவங்க வீட்டுக்கு பக்கம் போய் லேசா எட்டி பாத்தேன் வீடு பூட்டி வெளிய பூட்டு போட்டுருந்துச்சு சரி நம்ம இன்னிக்கு கொடுத்துவச்சது அவ்ளோ தான்னு நெனச்சு அங்க இருந்து கெளம்பி வீட்டுக்கு போய்ட்டேன் வீட்டுக்கு போனதும் என் மனைவியோட வழக்கம் போல ஒரே தகராறு என்னடா இது எங்க போனாலும் நிம்மதி இல்லாத வாழ்க்கையா போய்ட்டு இருக்கேனு யோசிச்சு எப்பயும் என் வீட்ல யாருக்கும் தெரியாம ஒரு இடத்தில சரக்கு பாட்டில் வச்சுருப்பேன் அங்க போய் சரக்கு எடுத்து மொட்டைமாடில நின்னு அந்த நட்சத்திர தேவதையா நெனச்சு கொஞ்சம் கொஞ்சமா குடிச்சு அந்த பொலிவு முகத்தோட சிரிப்பு முகத்தை நெனதும் என் மனசுக்கு ஆறுதலா இருந்துச்சு அந்த நிம்மதிலை போய் அப்படியே படுத்துட்டேன் ஆனா என் மனசு முழுக்க இப்ப அந்த நட்சத்திர தேவதை முகம் தான் மறுபடியும் மறுபடியும் வந்துட்டே இருந்துச்சு
அடுத்து நான் எப்ப அவங்கள பாப்பேன்னு நெனச்சுட்டே தூங்கிட்டேன்
அடுத்து நான் அவங்கள பாத்தேனா இல்லையா என்ன நடந்துச்சுனு அடுத்த பாகத்துல சொல்றேன்
ரொம்ப போர் அடிச்சா சொல்லுங்க எப்பயும் நம்ம டயலாக் ஒன்னு தான் உங்கள் கருத்துக்களை பிடித்திருந்தால் இதில் கொட்டலாம் இல்லையென்றால் காரி துப்பலாம்.