பாதைகள் தான் புதிதானது.. நான் பயனிக்க நினைத்த நினைவுகள் எனது பாதங்கள் இன்னும் அப்படியே தான் இருக்கிறது.
நான் ஏன் மௌனமானேன்…?
நான் ஏன் தனிமையை நேசித்தேன்…?
நான் ஏதற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்….?
எனது காத்திருப்பின் இடம் பூர்த்தியாகுமா…?
யார் அந்த நிலவு…?
நான் என்ன கேட்டேன்….
அவளை அவளாக ரசிக்கும் இரு விழிகள்… இதற்கு மேல் எனது மனதில் இருந்ததை கூறினாள் நீங்கள் கோபம் கொள்வீர்கள்
நாம நேராக கதைக்குள் போகலாம்
கடற்கரையில் ஓரமாக பாதைகள் நெடுவே ஒருவர் காலடி தடங்கள் அது ஆணா பெண்ணா என்று தெரியவில்லை.சரியென்று கொஞ்சம் தள்ளி நடந்தேன் மணலில் கொஞ்சம் ஈரமான இடத்தில் நானோ கடல் அகழி எனது பாதங்களை என்று எழுதி இருந்தது மீதி கடல்அலையால் அழிந்து இருந்தது நானும் சரியென்று அந்த பாதங்களை பின்பற்றி நடந்தேன் கொஞ்சம் தூரம் மறுபடியும் கீழே மணலில்
இதோடு எனது கனவுகளை ஆழ்கடலில் தூக்கி ஏறிகிறேன் இதுவே இறுதி நன்றி
என்று எழுதி இருந்தது.நான் என்னடா இது யாரா இருக்கும் என்று மறுபடியும் அந்த பாதங்களை பின் தொடர்ந்தேன் தூரமாக பார்த்தேன் யாரும் தென்படவில்லை.அங்கே நிறைய படகுகள் தான் நிறுத்தி வைத்து இருந்தார்கள்.மறுபடியும் நடந்து சென்றேன் அதன் பிறகு காலடி தடங்கள் காணவில்லை படகுகள் மட்டுமே இருந்தது படகு பக்கத்தில் நெருங்கி சுற்றி பார்த்தேன் அங்கே உன்மையிலே கடல் கண்ணி போல் ஒரு பெண்.
சிலை போன்று எதுவும் பேசாமல் அமைதியாக
அமர்ந்து இருந்தால் என்னை பார்த்ததும் விழிகள் மட்டும் விழகியது புருவங்களை உயர்த்தி என்ன என்று குரல் எழுப்பினாள்.நான் நீங்கள் தான் கடல் அகழியா இல்லை கடல்கண்ணியா என்று கேட்டேன்.அவள் இதழ்கள் மெதுவாக புன்னகையித்து நீங்க அதை படித்து தான் இங்கே வந்திங்களா என்று கேட்டு எழுந்து நின்றாள்.நான் ஆமா உங்கள் பாதங்களை பின்பற்றினேன் முதலில் நானோ கடல் அகழி எனது பாதங்களை அதன் பிறகு என்னை எழுதி இருந்திங்க கடல் அலையால் அழிந்து இருந்தது என்று கேட்டேன் அவள் எனது பாதங்களை பின்பற்றாதீர்கள் என்று எழுதி இருந்தேன் என்றால் நான் ஓகோ சாரி என்றேன் பரவாயில்லை என்றால்.நான் சற்று அவளது விழிகளை ரசித்தேன் அதை அவளும் புரிந்து கொண்டால் உங்க பெயர் என்ன என்று கேட்டாள் நான் இனியவன் என்றேன் அவள் ம் அருமையான தமிழ் பெயர் என்றால் நான் உங்கள் பெயர் என்று கேட்டேன் அவள் தேன்மொழி என்றால் உங்கள் பெயர் அதை விட அருமை என்று கையை கொடுக்காமல் கைவிரல்களை மடக்கி குத்துவது போல் நீட்டினேன் 🤜 பதிலுக்கு அவளும் 🤛 ஒரு குத்து விட்டு ம் என்றால் வாங்க அப்படியே நடக்கலாம் என்றால் நானும் ம் சரி என்று கீழே இருந்த அவளது ஹேன்ட் பேக் எடுத்தேன் அவள் கொடுங்க என்றாள் நான் பரவாயில்லை என்று எனது தோளில் போட்டு கொண்டு கடல் அலை ஓரத்தில் இருவரும் நடந்தோம்.ஏன் அப்படி எழுதி இருந்திங்க என்று கேட்டேன் அவள் அதை பற்றி இப்போது பேச வேணாம் என்றாள் நான் சரியென்றேன் உங்கள் பேச்சு வழக்கு சென்னை மாதிரி இல்லை எங்க ஏறியா மாதிரி இருக்கு உங்களுக்கு எந்த ஊர் என்று கேட்டாள் நான் தூத்துக்குடி என்றேன் அவள் ஹே உன்மையாவா என்றால் நான் ஆமா வேணும்னா ஆதார் கார்டு காட்டனுமா என்று கேட்டேன் அவள் சிரித்துக்கொண்டே அது எதுக்கு நான் நம்புகிறேன் என்றால்.நான் ஆமா இப்போது அதுதானே ரொம்ப முக்கியம் என்றேன்.உங்களுக்கு எந்த ஊர் என்று கேட்டேன் எனக்கு பக்கம் தான் திருநெல்வேலி என்றால் அய்யோ சூப்பர் நீங்க என்ன வேலை பார்க்கிங்க என்று கேட்டேன் அவள் நான் ஒரு பேங்கில் வேலை செய்கிறேன் இது மாதம் கடைசி வேலை முடிவதற்குள் உயிர் போய்விட்டது பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு என்றால்.நான் ஓகோ நமக்கு பைத்தியம் பிடிச்சா இந்த உலகம் அதை பார்த்து சிரிக்கும் ரசிக்கும் என்றேன்.ம் உன்மை தான் அதுக்கு என்ன பன்ன என்றால்.நான் சிரித்துக்கொண்டே நமக்கு பைத்தியம் பிடித்த மாதிரி அவங்களுக்கு கோட்டி பிடிக்க வைக்கனும் அப்போது தான் நமது பக்கத்தில் ஒருத்தரும் வர மாட்டார்கள் என்றேன்.அவள் சிரித்துக்கொண்டே சரி நீங்க என்ன பன்னுறிங்க என்று கேட்டாள்.இதுவரைக்கும் ஒரு கம்பெனியில் வேலை பார்த்தேன் பக்கத்தில் வேலை பார்த்த ஒருவருக்கு உடம்பு சரியில்லை அவருக்கு லீவு வேனும் கேட்டேன் என்னை ஒரேயடியாக வீட்டுக்கு போ அனுப்பி விட்டார்கள்.அதான் அந்த சூப்பர்வைசர் வாயில ஒரு குத்து குத்திட்டு போல மயிறு நீயும் உன் கம்பெனியும் வந்து விட்டேன் நைட்டு ஊருக்கு கிளம்பிற வேண்டியது தான் என்றேன் அவள் அய்யோ அவசரபட்டிங்க கொஞ்சம் பொறுமையா இருக்கலாம்லா என்றால் பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பார்கள்..அப்படி பொறுத்து பொறுத்து தான் நான் இங்கே வந்து நிற்கிறேன் சில விஷயங்கள் அதற்கேற்ப அதே மாதிரி தான் பதில் தரனும் அப்போது தான் இந்த சமுகத்தில் வாழ முடியும் என்றேன்.அவள் ம் அப்படி பார்த்தா நானும் மேனேஜர் மூக்கை உடைக்கனும் போல என்றால் நான் சிரித்துக்கொண்டே அப்படிலா பன்னாதா என்றேன் சரி வாங்க டீ குடிப்பிங்களா என்று கேட்டாள் நான் என்னது குடிப்பிங்களாவா அண்ண இரண்டு டீ அதுல ஒன்னு சீனி கம்மியா என்றேன் டீ கடைக்காரர் என்ன என்றார் ஆமா இவன் சீனினா என்ன கேட்பான்.அண்ண சுகர் கம்மியா என்றேன் அவள் சிரித்தாள் என்ன சுகர் பேசன்டா என்று சிரித்தாள் நான் இல்லை இல்லை ஒரு நாளைக்கு பத்து டீ, காபி மேல போகும் அதான் என்றேன் அவள் ம் நீங்க என் ரகம் தான் போல சரி பேக் தாங்க என்று வாங்கி கொண்டாள் நாங்கள் டீ குடிக்கும் போதே அவள் காசு கொடுத்து விட்டால்.உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டா என்று கேட்டாள் நான் சிரித்துக்கொண்டே அட ஏன்பா நீ வேற என்றேன் நான் இல்லை என்றேன் அப்படினா சாருக்கு லவ் ஓடுதா என்று சிரித்தாள் நான் அதுலாம் நமக்கு தூரம் அந்த சைடுலா போக கூடாது என்றேன் நீங்க என்றேன் அவளும் சிரித்துக்கொண்டே இதுவரைக்கும் அந்த என்னம் இல்லை இனி அமைந்தால் பார்க்கலாம் என்று எனது கண்களை ஆழமாக பார்த்து சொன்னாள்.நானும் அவளது இதழ்களை பார்த்து அப்படி அமைய வாழ்த்துகள் உறவே என்றேன் அவளது 32 பற்களும் சொலித்தது.சரி எங்க போறீங்க என்று கேட்டாள் நான் ஊருக்கு தான் இன்னும் எங்கே இங்க இருக்க என்றேன் அவளது முகம் வாடியது எதுல போறிங்க என்றால் ரயிலில் தான் என்றேன் உடனே அவளது போன் எடுத்து ரயில் எப்போதும் டிக்கெட் இருக்கா என்று பார்த்தால் ஆனால் ரயிலில் டிக்கெட் இல்லை நாளைக்கு காலையில் வந்தே ரயில் தான் டிக்கெட் இருந்தது உடனே நீங்கள் நாளைக்கு போகலாம்லா என்றால் நான் இன்னைக்கு தான டிக்கெட் எடுத்து இருக்க என்றேன் அவள் தயக்கத்துடன் இல்லை நாளைக்கு நானும் வரலாம் நினைத்தேன் இரண்டு நாட்கள் எனக்கு லீவு தான் என்றால் நான் அவளது விழிகளும் இதழ்களை கவனித்தேன் அவளது கண்கள் கீழே தரையை பார்த்தது இதழ்கள் நடுங்கியது.. நான் சரி அப்படினா நாளைக்கு நீங்க தான் டிக்கெட் போடனும் என்றேன் அவள் எனது கண்களை பார்த்து முகத்தில் புன்னகையில் அதுக்கென்ன இப்போதே டிக்கெட் போடுகிறேன் என்றால் வேகமாக போன் எடுத்து இரண்டு டிக்கெட் புக் பன்னினாள்.புக் பன்னிட்ட சூப்பர் என்று எனது கையில் ஒரு குத்து குத்தினால் சரி வாங்க ஹாஸ்டல்ல கொஞ்சம் டிரஸ் எடுத்திட்டு வேற பேக் எடுத்திட்டு வாரேன் என்றால்.ம் என்றேன் அவளது பைக் சாவியை கொடுத்து எடுக்க சொன்னால்.நான் சாவியை வாங்கி கொண்டு பைக்கில் ஏறி உட்கார்ந்து யோசித்தேன் நாளைக்கு காலையில தானே ரயில் என்று கேட்டேன் ஆமா அப்படினா நைட்டு எங்கே இருப்பிங்க ஹாஸ்டலில் இருங்க என்றேன்.அவள் நீங்க எங்கே இருப்பிங்க என்று கேட்டாள் நான் ரயில்வே ஸ்டேஷன்ல படுத்துப்ப உங்களுக்கு அங்கே செட் ஆகாது என்றேன் அவள் பரவாயில்லை இரவில் ரயில்வே ஸ்டேஷன் அமைதியாக இருக்கும் அங்கே உட்கார்ந்து பேசும் வாய்ப்பு மறுபடியும் கிடைக்குமா தெரியலை நானும் வாரேன் என்றால் நான் சிரித்துக்கொண்டே நீங்கள் உன்மையிலே கடல்கண்ணி தான் என்றேன் அவள் நான் அவ்வளவு ஓர்த் இல்லை வண்டியை எடுங்க என்றால்.
இந்த கதை படிக்கும் பெண்கள் உங்கள் உள்ளத்தில் உள்ள கருத்துகளை உளமார நினைத்தால் [email protected] மெயிலில் அல்லது கூகுள் சேட்டுல பேசுங்க இது கற்பனையாக எழுதினேன் நல்லா இருந்தா சொல்லுங்க அடுத்த பதிவை தொடர்கிறேன்…….
தீராத காதல்!
Posted on76510400cookie-checkதீராத காதல்!