கண்ட நாள் முதல் 2

Posted on

கண்ட நாள் முதல் 2
வணக்கம் இது கண்ட நாள் முதல் இரண்டாவது பார்ட் முதல் பார்ட் நல்ல இருந்துச்சுனு கேள்விப்பட்டேன் romba நன்றி இது அதோட தொடர்ச்சி தான் வழக்கம் போல புடிச்சா GCHAT பண்ணுங்க.
[email protected]

கண்ட நாள் முதல்

எப்படியோ அடுத்த நாள் விடிஞ்சிது இவங்கள பாக்கணும்னு உடனே எல்லாம் டக்கு டக்குனு ரெடி ஆகி கெளம்பி அவங்க வீட்டு பக்கத்தில போயிடு நின்னு பாத்தேன் அவங்க வீடு தெறந்து தான் இருந்துச்சு சரி அப்போ இன்னிக்கு கண்டிப்பா அவங்க ஆபீஸ் வருவாங்க அது என்ன ஆபீஸ் என்னனு கண்டுபுடிச்சிடலாம்னு கிளம்ப பாத்தேன் அப்போ ஒரு அழகான குரல்ல பாட்டு பாடுற சத்தம் என்னனு திரும்பி பாத்தேன் அது அந்த மின்னல் ஒளிய கண்ணுல வச்சுருக்குற அதே பொண்ணு தான் அவங்களோட அழகான அந்த இதழுல முணுமுணுக்குற சத்தம் என் இதயம் வரைக்கும் கேட்டுட்டு இருந்துச்சு ஒரு நாளும் உன்னை மறவாத பாட்டு பாடிட்டு இருந்தாங்க நான் அங்கேயே அப்படியே நின்னுட்டேன் என்னால அந்த குரல் கேட்காம இருக்க முடியல அவங்க உள்ள போய் அந்த பாட்டு சத்தம் எனக்கு கேக்காத தூரம் போனதுக்கு அப்பறம் தான் அங்க இருந்து கெளம்புனேன்

நேரா ஆபீஸ் போனேன் நான் ஒர்க் பண்ணலாம்னு எடுத்து வேல செய்ய அரமிச்சேன் தடவை பாத்தேன் எட்டு தான் ஆகிருந்துச்சு அவங்க வரதுக்கு எப்படியும் இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு அது வரைக்கும் ஏதாவது வேல செய்யலாம்னு தோணுச்சு ஆனா மனசுக்குள்ள அவங்க பாடுன பாட்டு தான் எனக்குள்ள ஓடிட்டே இருந்துச்சு என் போன் எடுத்து அவங்க பாடுன அந்த பாட்ட என் போன்ல டவுன்லோட் பண்ணி ஹெட்செட் மாட்டி நான் கேட்க அரமிச்சேன் ஐயோ என்ன ஒரு இசை என்ன ஒரு வசனம் அந்த பாட்டுல இது வரைக்கும் எத்தனையோ தடவ அந்த பாட்ட கேட்ருக்கேன் ஆனா இன்னிக்கு அத கேக்கும் போது ஏதோ புதுசா உணர்ந்தேன் கண்ண மூடி அந்த பாட்ட ரசிக்க அரமிச்சேன் கிட்டத்தட்ட ஆறு தடவ கேட்ருப்பேன் அப்பறம் நேரம் பாத்தேன் அவங்க வர நேரம் ஆச்சு வழக்கம் போல வெளிய போய் நின்னு ஒரு டீ வாங்கி குடிச்சிட்டே பஸ் பாத்துட்டே இருந்தேன்

அவங்க வர வேண்டிய பஸ் வந்துச்சு அந்த அழகான தேவதை அவங்களும் வந்து இறங்குனாங்க அந்த சேலை அழகுல அவங்கள பாக்கும் போது அடேங்கப்பா ஒரு நிமிஷம் கண்ண மூடி அவங்கள அப்படியே என்னோட கற்பனை கனவுலகத்துல அவங்கள பாத்தேன் என் கண்ணனுக்கு அப்படியே ஒரு மஹாராணி தேருல இறங்கி வர மாதிரி ஒரு உணர்வு அப்படியே கண்ண தொறந்து பாத்தேன் அவங்க வாசனை என் மூக்குல ஏற அத ஸ்வாசிச்சு அப்படியே அவங்க என்ன தாண்டி போக நான் அந்த மயக்கத்துலயே அவங்க பின்னாடி மெதுவா நடந்து போய்ட்டு இருந்தேன் அவங்க நடந்து போற அழகும் அவங்களுக்கு பின்னாடி நீளமா தொங்கிட்டு ஆடிட்டு இருந்த அந்த ஜாடை அழகையும் ரசிச்சி பாத்துட்டே இருந்தேன் அப்போ ஒரு நிமிஷம் டக்குனு நின்னாங்க நானும் நின்னுட்டேன் திரும்பி பாத்தாங்க எனக்கு ஒரு நிமிஷம் உள்ளுக்குள்ள பக்குனு இருந்துச்சு என்ன அப்படினு அவங்க புருவதையும் தலையையும் தூக்கி கேட்டாங்க நான் ஒன்னும் இல்லனு என் தலையை ஆட்ட கொன்னுடுவேன்னு மாதிரி அவங்க விரலை காட்டி சொன்னாங்க எனக்கு ஒரு நிமிஷம் வேர்த்து கொட்டிடுச்சு

நான் மெதுவா அப்படியே திரும்பி என்னோட ஆபீஸ் பக்கம் நடக்க ஒரு சுடக்கு சத்தம் கேட்டு நான் திரும்புனேன் என் எதிர்ல கொஞ்சம் பக்கத்தில அவங்க நின்னுட்டு இருந்தாங்க அப்படியே எனக்கு தூக்கி வாரி போட்டுடுச்சு நான் கொஞ்சம் தடுமாறி பின்னாடி நடந்து நின்னேன் அவங்க ஒரு மாதிரி மொறச்சுட்டே என்ன பாத்தாங்க மேலயும் கீழயும் பாத்தாங்க என் கூட பேச அரமிச்சாங்க அதாவது மிரட்ட அரமிச்சாங்க இப்படி தான் சொல்லணும் என்ன டா நானும் பாத்துட்டே இருக்கேன் அங்க நின்னு என்ன மொறச்சு பாத்துட்டு இருக்க வீட்டு பக்கம் சுத்திட்டு இருக்க இப்ப என் பின்னாடியே அலைஞ்சிட்டு இருக்க என்ன உன் கதைனு கேக்க எனக்கு உயிரே இல்ல எனக்கு வாய் எல்லாம் ஒளறுச்சு இல்லைங்க எனக்கு உங்கள பாத்துட்டே இருக்கனும் போல இருந்துச்சு இங்க இருக்றதுலயே நீங்க தான் என் கண்ணனுக்கு மஹாராணி மாதிரி அவ்ளோ அழகா ஜொலிச்சீங்க எனக்கு எப்படி உங்க கிட்ட பேசணும்னு தெரில ரொம்ப பயமா இருந்துச்சு ஏதோ உங்கள பத்தி தெரியணும்னு ஆசைப்பட்டேன் அதான் இப்படிலாம் பண்ணேன் என்ன மன்னிச்சிடுங்கனு சொன்னேன் சத்தியமா எப்படி இவ்ளோ பேசுனேனு எனக்கே இப்ப வரைக்கும் தெரியல ஆனா என் பேச்சுல அவ்ளோ தடுமாற்றம் அவ்ளோ திணறல் இருந்துச்சு

உடனே அவங்க என்ன மறுபடியும் மேலையும் கீழயும் பாத்தாங்க உண்மையா சொல்லனும்னா நான் ஒன்னும் அவ்ளோ அழகுலம் கிடையாது கொஞ்சம் குண்டா தான் இருப்பேன் அத நெனச்சு அப்பப்ப ரொம்ப வருத்தப்பட்ருக்கேன் நெறய பேர் என்ன காது பட பேசுவாங்க எல்லாத்தையும் சகிச்சுக்க பழகிட்டேன் இப்ப இவங்களும் அதே தன நெனப்பாங்க அப்படினு என் மனசுக்கு தோணுச்சு நான் நேரா அவங்க கிட்ட சொன்னேன் சரிங்க நான் பண்ணது தப்பு தான் உங்க ரேன்ஜ்க்கு நீங்க நல்லா அழகா இந்த சிக்ஸ் பேக் வச்சுருக்கிறவன தான் உங்களுக்கு புடிக்கும் சரி பரவால்லனு நான் சொல்ல டேய் என்ன நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்க நான் ஏதாவது சொன்னேனா உன் கிட்டனு மிரட்டி கேட்டாங்க உடனே நான் எனக்கு தோணுச்சு அதனால சொன்னேங்க ம்ம்ம் சரி எனக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கு ஆபீஸ் முடியும்னு அவங்க சொல்ல ம்ம்ம் தெரியும்ங்கனு நான் சொல்லா அட ச்சை என் வாய் இருக்கே சரியான தவளை வாய்னு என் மனசுக்குள்ள திட்டிட்டு இருக்க கோவமா இருந்த முகத்துல கொஞ்சம் கொஞ்சமா சிரிப்பு வர தொடங்க சரிங்க சாயங்காலம் கண்டிப்பா மீட் பண்ணலாம்ங்க உங்களுக்காக காத்திருப்பேன்னு சொல்லிட்டு சிரிக்க அவங்களும் மெதுவா அவங்க இதழ் ஓரமா சிரிச்சிட்டே திரும்பி அவங்க ஆபீஸ் போனாங்க போகும் போது பாதில நின்னு அவங்க ஆபீஸ் பேரையும் அந்த தெரு பேரையும் சொல்லிட்டு மறுபடியும் திரும்பி நடந்து போனாங்க

எனக்கு செம்ம சந்தோஷம் ஆகிடுச்சு அந்த நேரம் பாத்து லேசா டதூறல் மழை சிந்த அதுல மெதுவா நெனஞ்சுட்டே அவ்ளோ சந்தோசமா முகத்துல அவ்ளோ ஒரு பொலிவு இருந்துச்சு எனக்கு ஆபீஸ் போய்ட்டு உள்ள போய்ட்டு வேல பாக்க அரமிச்சேன் அன்னிக்கு முழுக்க போக எனக்கு அவ்ளோ சிரமமா இருந்துச்சு எப்படியோ அன்னிக்கு சாயங்காலம் நாலு மணி ஆச்சு நான் ரெஸ்ட்ரூம் போய்ட்டு முகம் எல்லாம் கழுவிட்டு ரெடி ஆகி வந்து உக்காந்துட்டு இருந்தேன் சாயங்காலம் 4 :45 ஆச்சு நேரம் ஆச்சுன்னு எல்லாத்தையும் முடிச்சிட்டு வெளிய போய் பைக் எடுத்துட்டு அவங்க சொன்ன அவங்க ஆபீஸ் வாசல்ல போய் நின்னு அந்த மின்னல் ஒளி தேவதையின் வருகைக்காக காத்துட்டு இருந்தேன் சரியா 5 மணிக்கு அந்த அழகி அவங்க ஆபீஸ் விட்டு வெளிய வந்தாங்க அவங்க வரது என் கண்ணனுக்கு படத்துலலாம் வர மாதிரி அப்படியே ஸ்லோ மோஷன்ல தெரிஞ்சிது மெதுவா நடந்து என் பைக் பக்கத்தில வந்து என் பக்கத்தில நின்னு லேசா சிரிச்சாங்க

அடுத்த என்ன நடந்துச்சுனு அடுத்த பார்ட்ல சொல்றேன். இன்னும் நெறைய விஷயத்தை உங்க கூட பகிர்ந்திக்றேன். போர் அடிக்கிறேன்னா சொல்லிடுங்க ஷார்ட்டா அடுத்த பார்ட் ஓட முடிச்சிக்கிறேன். உங்க விருப்பம் தான்.
உங்கள் கருத்துக்களை பிடித்திருந்தால் இதில் கொட்டலாம் இல்லை என்றல் காரி துப்பலாம்

[email protected]

776140cookie-checkகண்ட நாள் முதல் 2